இன்று காலை நான் கண்ட கனவு என்னை மிகவும் நெகிழ வைத்தது!
மலர்நதும் மலராத ,
சேர்ந்தும் சேராத உறவின் நினைவு!
பிரிவது சேர்வதற்கு சேர்வது பிரிவதற்க்கே!
என் திருமணமான ஆறாவது மாதம் அவள் குறுக்கிட்டாள்!
ஒரே மருத்துவமனை நான் மருந்துகள் வினியோகிப்பவன்
அவள் கதிர் பிரிவு ரேடியாலஜீ ஆய்வாளர்!
சில நாட்கள் கண்கள் அவசர நேர்முகம் கண்டன.
இதுபோல பெண்ணுக்காக தேடினேன் ஆனால் விதி ஏனோ அவளை தாமதப்படுத்தியது
சில நாட்களில் குடியிருப்பும் அருகே அமைய என் வீட்டம்மாவுடனும் குடும்ப நட்பு.
பிறகு முதல் பையன் பிரசவத்திற்க்கு'என்பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா' கதைதான்
அது நட்பா வேறு ஏதாவதா புரியவில்லை
பிறகு என் மகன் பிறந்து கல்யாணப் பரிசு கதைதான் நட்பு தொடர்ந்தது.
எல்லை மீறியதில்லை .., விதி தான் இருக்கே!
எனக்கு வேறிடத்திற்கு மாற்றல் வந்தது
அழுது விட்டாள் அப்பதான் ஆழம் புரியத் தொடங்கியது.
மாற்றல் ரத்து செய்ய அவள் எவ்வளவோ தெரிந்தவர் மூலம் முயன்றாள்
விதிக்கு தான் வெற்றி !
பிரிந்தோம்
கொஞ்சநாள் தொய்வு .....
பிறகு பழைய சக ஊழியர்வீட்டு விசேஷம் வந்திருந்தாள் கூட
அவள் தாய் .திருமணம் செய்துக் கொள்ள மறுக்கிறாள் என்றாள்
நான் பேசி பார்த்தேன் அவள் கண்களில் நீர்!
கதிர் பிரிவில் வேலை விட முடியலை யாரும் பண்ணிக்க வரவில்லை
நான் எதிலுமே தாமதித்துவிட்டேன்!
என்றுசொல்லி கூர்மையாக பார்க்கிறாள் இன்றும் வலிக்கிறது!
பிறகு ஒரு தடவை போன் செய்து வீட்டுக்கு வரசொன்னாள்
அவள் தாயார் ஏகமா புகார் யாரையும் வேண்டாம் என்கிறாள் நீங்களே சொல்லுங்கன்னு
சொல்லி விட்டு போனாள்.
தத்துவ மெல்லாம் சொல்லி பார்த்தேன் கேட்கவில்லை என், பிள்ளைகள் மனைவி நலனையும் கேட்டுக்கொண்டிருந்தாள்
நான் சொல்வதை கேட்காததற்க்கா வரசொன்னாய் !
பார்க்கணும்னு தோணிற்று என்கிறாள் அம்மா வார்த்தை கேள் என்று சொல்லி
மனமில்லாமல் விடைபெற்ற பின் மீண்டும் பலநாள் பிரிவு.
என் புதிய வீ்ட்டில குடியேறிய சில நாட்களில் என் தந்தை இறப்பு தகவல் சொன்னேன்
ஓடி வந்தாள்.
பிறகு குடும்பம் பசங்க படிப்பு தொலைதூரப் பயண அலுவலகம் சோர்வு குடும்பசுமை
காலம் மறதியின் நண்பன்.
மறந்தே போய் விட்டேன் இன்று காலை இனிய கனவு ....!!
பூங்கா நகர் ரயிலடியின் அருகே வருகிறேன் பூக்காரம்மாவிடம் பார்த்தேன் அவளை.
40 ரூபா கொடு அந்த பூ வாங்கிகொடு வண்டி வரப்போகுது தாமதமாகிவிட்டது என்கிறாள்
இதுலேயும் தாமதமாதாமதமா? என்று சகஜமாக சொல்கிறேன்.
அவள் பணத்தினை வாங்கிப் பூக்காரம்மாவிடம் கொடுக்கிறாள் நான் வாங்கிய பூ வை
என்னிடமிருந்து வாங்கி தலையில் வைத்த்துக்கொண்டே நெருங்கும் மினசாரவண்டியில் ஏற
போகிறாள் திரும்பி பார்க்கிறாள் பை பை சொல்கிறாள்.
கனவு கலைந்து நான் நினைவில் வியந்த நேரம் 8 மணிக்கு போன் வந்தது.
அவள் தாய்தான்!
கதிர்வீச்சு பாதிப்பினால் உயிரை விட்டாளாம் என் மனைவிதான்
பேசினாள் கடைசி வரை கல்யாணம்
பண்ணிக்கலையாமே என்று மனைவி வெகுளியாக கேட்கிறாள்.
எல்லாவற்றிலும் தாமதப்பட்டவளை
மரணம் மற்றும் முந்திக்கொண்டு அழைத்துக்கொண்டு விட்டது.
கொரோனாபுண்ணியத்தில் இங்கிருந்தபடியே
வருத்தம் சொல்லிவிட்டாளாம் மனைவி!
அவள் கடமை அவ்வளவு தான்! ஆனால் எனக்கு?
இன்று காலை கனவில் என்னிடம் பூ வாங்கி வைத்துக் கொண்டு விடைபெற்றது யாரிடம்
சொல்வேன் மலர்ந்தும் மலராத சேர்ந்தும் சேராத நினைவை பதித்து விட்டு போய்விட்டாள்!

மிக அழகாக காதலை சொல்லியுள்ளீர்கள் ஐயா.
பதிலளிநீக்குவலை பூவிற்கு உங்களை முதல் ஆளாய் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
வலைப்பூ உலக வருகைக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி
நீக்குPlease send me in English or Hindi
பதிலளிநீக்கு