26.9.20

கண்ணனுடன் சில நொடிகள்

 கண்ணனிடம் பேச தொடங்கினேன்

நான் உடலில்லை, நான் மனம், 24 தத்துவங்களும் நானல்ல நான் ஆன்மா

அந்த ஆன்மாவும் கண்ணன் அல்லது உன் இஷ்ட தெய்வம் என்று சொல்கிறார்கள், நீயும் கீதையில் சொல்லியிருக்கிறாய், அஹம் ஆத்மா குடாகேச,என்ற ச்லோகத்தில்! கொஞ்சம் புரியும் படியாக சொல்லேன் என்றேன்! 

மிக சாமர்த்யமாக பெரிய விஷயத்தை சுளுவாக கேட்கிறாய்! நானும் உனக்கு விளக்க பார்க்கிறேன். 

உன் வீட்டில் இயங்கும் எல்லா மின்சார உபகரணங்கள் இயங்க ஒரே மின்சாரம் 

பயன்படுவது போல் இந்த ஆன்மா எல்லாவித அசையும் அசையாத வாழும் 

உயிர்களனைத்திலும் இருந்து இயக்குகிறது. நான்தான் அந்த மின்சாரம் போன்ற சக்தி என்று நினைத்துக் கொள்!ஆனால் அந்த மின்சாரத்திற்கு தனி அறிவு  கிடையாது .எனக்கு அதாவது ஆன்மாவுக்கு குணம் அறிவு எங்கும் எப்பொழுதும் தங்குதடையின்றி இருந்து இயங்குவது தான் குணம்! 

நான் கேட்கிறேன் குணத்தை எப்படி உணர்வது? 

கண்ணன் சொல்கிறான்- நீ உடல்,மனம் போன்ற 24 தத்துவங்கள் என்றால் இவற்றின் குணம் அமைதியில்லாதது எப்பவும் மாறிக்கொண்டேய்குப்பதுன்னு பொருள்! 

நீ நினைவில் இருக்கும்போதும் உடல் என்ற ஸ்தூல சரீரமாக இருக்கிறாய். 

மனதளவில் இயங்கும்போது சூட்சும சரீரமாகவும இயங்குகிறாய்

கனவு நிலையில் சூட்சும சரீரம்தான் எல்லா விஷயங்களையும் தாறுமாறாக

பார்க்கிறது 

அமைதி அதுவரையில் இல்லை ஆனால் ஆழ்ந்த தூக்கத்தில் அங்கு உன்உடலுமில்லை மனமுமில்லை எதுவுமில்லை !உன் கண்ணனான நானும் இல்லையல்லவா ?ஆனால் அங்குயிருந்தது என்ன? சுகமான நிலை! 

யாருமே இதுவரையில் இம்சையாக தூங்கினேன் னு சொன்னதில்லை! 

அந்தநிலையைவிட்டுவிட்டு எழ எவரம்

விரும்புவதுகூடயில்லை! இன்னமும் கொஞ்சம் தூங்கலாமாஎன்று விரும்பாத உயிரே யல்லை! ஏன் என்றால் அதுதான்உன்இயல்பான நிலை மற்ற எல்லா தலைவலிகளையும் நான் உடல் நான் மனம் எல்லாம் என்னுடையது என்று நினைத்தவுடனையே அந்த அமைதி தொலைந்து விடுகிறது! 

உண்மையில் ஆண்மா இறைவன் தெய்வத்தின் நிலை இந்த அமைதி சாந்தி தான் !

நான் கண்ணனாக தேர் தட்டில் வெட்டுக் கொல் என்ற கோஷங்களுக்கு

நடுவில் அமைதியோடு 700 தத்துவங்களை கீதையாக கொடுத்தேன் அந்த போரையும் இம்மியளவும் அமைதி கலையாமல் புன்முறுவலுடன் முடித்தேன்! ராமனாக வெளி பார்வைக்கு மனித வேடம் பூண்டதால் அழுது புலம்புவது போல் நடித்தேன தவிர ஆழத்தில் இந்த சாந்தியோடதானிருந்தேன் !இருப்பேன் !!இதுதான ஆண்மா தெய்வம் கண்ணனான என் குணம் !சிலுவையில் ஏசுபிரானாக உடல் முழுவதும் ஒர் இடம் பாக்கியில்லாமல் ஆகளால் அடிக்கப்பட்டு நான் அழவில்லை, அவர்களின் அறியாமையை மன்னித்தேன்! 

நீயும் உடல் மனம் நான் எனது என்ற எண்ணத்தை விட்டு அமைதிதான் உன் இயல்பு என உணர்ந்தாயேயானால் நீயும் நானும் ஒரேஆண்மாவாக ஆகிவிடலாம்

என்று சொல்கிறான் நம் கண்ணன்! 

அதையே பின்பற்றுவோமாக! 

25.9.20

கண்ணனுடன் சில நொடிகள்

எல்லோரடமும் பேசுவது குறைந்துவிட்டது. அசத்து பேச்சுன்னு வெளிப்படையாகவே ஆகிவிட்டது நம்முடன் பேசிக்கோண்டயிருப்பது- அதைத்தான் நினைவுதெரிந்தநொடியிலிருந்து செய்வது வெரும் பேத்தலாகயிருக்திறது. என்னதான் செய்வது? கண்ணனுடன் பேசலாமேன்னு தோன்றியது கூப்பிடமாட்டேனான்னு இருந்தவன் பொல் பேசலாமேன்னு என்கிறான்! உன்னோடு பேச ஆசைதான, ஆனா எல்லோரும் விரும்பாததைத் நீ விரும்புவியோன்னு சந்தேகம் என்றேன். பார்ப்போம், என்கிறான்! அறிவைப் பற்றி கேட்கிறேன் சொல் அதுதான் அறிவு? சிரித்தான் கண்ணன் பார்ப்பதெல்லாம் அறிவு தான்! இதிலிருந்துதான் எல்லாம் வந்தது. உன்னிடம் என்பார்களே? நானே கண்ணன் என்ற அறிவு தான்! நான் தனியாக திருக்கோயில் விரும்பினால் எல்லாமாக கடவுள் என்றேன் நடந்தது நீ கற்றக் கல்வியும் அறிவு தான் ஆனால் அது உனக்கு பணம் சேர்க்க தான் உதவியபது . என்னைப் பற்றி நீ அறிந்தது உன்னோடு பேசவைவக்கமுடிந்ததுபார், இதுதான் உயர்ந்த அறிவு. சரி,உனக்கு ரூபம் என்னைப்போல தானா ரூபமேயில்லைரூபமேயில்லைன்னு சொல்றாங்களே? அவர்கள் பாவத்தில் அப்படி! யார் என்னை எப்படி விரும்புகிறீர்களோ அவர்களுக்கு நான் அப்படியாகவேயிருக்கிறேன்! நீ இல்லவேயில்லைன்னு சொல்கிறவங்களுக்கு? அவர்களின் அந்த நம்பிக்கையாகவும் நான்தானிருக்கிறேன் அதை அவர்களுக்கு சொன்ன அவர்கள் தலைவர் படத்திற்க்கும் சமாதிக்கும் அவர்கள் பூஜைதான் செய்கிறார்கள்! அவர்களை விடுதலை வெளிநாட்டவர்க்கு எப்படி? அவர்களின் உழைப்பாக,ஒழுக்கமாக சுத்தமாக சமுதாய சேவையாக, ஊழலற்ற ஆட்சியாக உயிரினங்கள் மேல் அன்பாக நான்தான் இருக்கிறேன்! சரி உருவமில்லாமல் எப்படியிருக்கிறாய்? உனக்கு உருவமாக எப்படிதெரிகிறேனோ, அப்படியே உனக்குள்ள நீ தூங்கும் போதும் கனவிலும் நினைவிலும் நான்தான் சைதன்யம், அதிர்வாக சக்தியாக நீ உண்ட கண்டதையெல்லாம் சரிக்கிற சக்தியும் நான்தான்! எல்லோருள்ளம்தானே? ஆம் சத்தியமாக! எல்லாூக் கைகளாலும் செயல்படுவது, எல்லாகண்களாலும் பார்ப்பது, எல்லாமனங்களாலும் நினைப்பது, எல்லா நாக்கு களாலும் சுவைப்பது உரைப்பது எல்லா கால்களிலும் நடப்பது எல்லா சிறகுகளாலும் பறப்பது எல்லாம் நான்தான்! சுருக்கமாக சொன்னால் நானில்லாமல் ஒருத்தி திரும்புதிரும்புகூட நகராது! எனக்குபேசவார்தையில்லை நாளை நிறைய கேட்கிறேன் கண்ணா உள்ளே கூப்பிடுங்கள் ம்வர்க் கைப்பிடித்து செய்தே ஆகணும் என்கஷ்டம்! என்றேன். கஷ்டமானதை என்இஷ்டத்துக்க இனிமேலாவது செய்தேன், நான் அதையே உன் பூஜை யாக ஏற்க்கிறேன்ன்னு சொல்றேன் நம் கண்ணன்! இதுவும் பேத்தலாகயிருக்திறது இருந்தால் மன்னியுங்கள்!

25.7.20

நானும் பீஷமனோ?


          நானும் பீஷ்மன்தான்

என் இரண்டாவது மகன் திருமண நிச்சயதார்த்தம்
சம்பந்தி பக்கம் உறவுகள் அறிமுகம் ஒருபெண் நல்லவிதமாக புடவையுடுத்தி
இப்படி பார்ப்பதே குறைந்த காலமிது!
அறிமுகம் செய்த பொழுது லேசா அதிரந்தேன்!
எங்கேயோ பலநாள் பழகிய மாதிரிஒரு இன்ப அதிர்வு!
எனக்கு 62 வயது
அந்த பெண்ணிடம் நேரிடையாக கேட்கிறேன் 11ம் வகுப்பு படிக்கிறாள்!
வயதுக்கு மீறிய வளர்சசி!
அவளும் புதிதாக பார்க்கவில்லை
அன்றைய நிகழ்ச்சி முடியும் வரை அவர்கள் பக்கத்தில் என்னிடம் உரையாடியவள் அவளே!
உனக்காக இன்னொரு மகன் எனக்கு இல்லாமல் போயவிட்டதேன்னு சொல்லி சிரிக்கும் அளவில் அன்று விடை பெற்றோம்
வெகுநாள் அந்த குழந்தை நினைவு இருந்தது
பிறகு கொரோனா புண்ணியத்தில் என் மகன் திருமணம் அவர்கள் ஊரிலேயே சிக்கனமாக நடக்க
அந்த ஊர் மக்களிடம் நான் நன்றாக பழகியதில்  அந்த பெண் பங்கு அதிகம்
பிறகு விடை பெரும் நேரம் ,எல்லோருக்கும்
சொல்வதுபோல் வீட்டுக்கு வரவேண்டும்னு சொன்னேன் அந்த பெண்ணுக்கும் தான்
பேருந்துகள் கிடையாது காரில் வாருங்கள் என்றேன் !காரில் வந்து வீட்டு வாசலில் இரங்குவேன்! என்று அந்த பெண்ணும் சொன்னாள் !அப்பதான் எனக்கு சுரீர் என்று உரைத்தது!
பல வருடம் முன்
என் வாலிப காலம்!
திருமணத்திற்கு நானே பெண் தேடி கொண்டிருந்த 25 வயது காலம்
என் சக பெண் பணியாளர் என் பிரிவை சேர்ந்தவர் அவருக்கு தெரிந்த பெண் பற்றி சொல்ல பெண் பார்க்க அம்மாவுடன் போயிருந்தேன், லட்சணமாகயிருந்தாள்! நல்ல பாடலும் பாடினாள் !
நான் சம்மதித்ததாகத்தான் காட்டியும் ஆயிற்று!
என் அண்ணா அவர் மனைவி இந்த பெண்ணை பார்த்து வந்து முகம் சுளித்தார்கள் ஏற்றபடியில்லைன்னு சொன்னார்கள் எனக்கும் மேலும் 1 ,2 பெண்களை பார்க்கலாம்னு சொல்ல அலட்சியம் !நாள் கடத்தினோம் !
பிறகு அவள் தந்தை நேரிடையாகவே வந்து கேட்டார் !அண்ணன் அருகில் இல்லை முடிவு சொல்ல முடியவில்லை! அவர் கெஞ்சி பார்த்தார் என்னமோ மிருக குணம் மறுத்துக்கொண்டேயிருந்தேன்!
அவர் நடுவில் ஒரு வர்த்தையை விட்டார் சொந்தத்தில் பையனிருக்கிறான் நீங்கள் பார்த்துவிட்டுபோனதால் அவள் அவர் பேச்சே வேண்டாம்' என்கிறாள் என்றார்
அப்ப வேண்டவே வேண்டாம் என்று மறுத்து விட்டேன்
அவர் வருத்தத்துடன் போய்விட்டார்!
பிறகு என் சக பெண்மணி சொல்லி பார்த்தாலள் நான் அவரை தவிர்த்துவந்தேன்
ஒரு நாள் அவர் என்னை பார்த்து சொன்னார் 'அவன் எங்களை சாதாரணமாக நினைத்து விட்டான் ஒருநாள் காரில் வந்து இறங்கி என்னை பற்றி புரியவைப்பேன் 'என்று சொன்னாளாம்!
அத்துடன் அவளை மறந்துவிட்டேன்
ஆனால் அதன் பின் அவள் பட்ட மன வேதனையின் பலனை அனுபவித்தேன்
ஒருமுறை ஒரு வது வீட்டிக்கு பெண் பார்க்க சற்று தாமதமாக போனேன் அவர்கள் வீட்டில் ஒரு குழந்தை மின்சாரம் தாக்கி இறந்து விட்டது !
வேறொரு இடத்தில் பெண் பார்க்க போனபோது அருகிலிருக்கும் ஒரு கோவிலில் இருக்க சொன்னார்கள் இருட்டி வட்டது அவர்கள் வரவேய்ல்லை அந்த பெண்ணுக்கு வேறு எண்மாம்!
அம்மா அந்த முதல் பெண் சாபமாயிருக்கும் என்றாள் !என் வரட்டுகவுரவம் மீண்டும் கேட்க முடியவில்லை  !
பிறகு கோவில் குளம் பிரார்த்தனை பரிகாரம் செய்து நல்ல யிடம் அமைந்து இரண்டு பிள்ளைகள் திருமணம் என வருடங்களே ஓடி வட்டது
இப்பொழுது இந்த 15 வயது பெண் என்னுடன் பேசியது என், அந்த நினைவுகளை தூண்டியது அந்த பெண்ணின் சாயல் இவளிடம் தெரிந்ததால் தானோ, காரணமில்லாமல் நெருக்கம் உணர்ந்தேன்? என்னமோ சம்பந்தமில்லாத யோசனை ன்னு ஒதிக்கினேன்
ஆனால் அப்படி யில்லை அப்புறம் நடந்தது !எங்கள் வீட்டுக்கு வருட சீர் கொடுக்கும் போதெல்லாம் அந்த பெண்வந்தாள்!
என் மருமகள் முகம் சுளிக்க ஆரமபித்தாள்
பிறகு அவளுடைய படிப்புக்கு என்னிடம் யோசனை கேட்கிறாள் மேல் படிப்புக்கும்! தினமும் வாஸப்பில் வாய்ஸ் மெயில் பேச்சு
பிள்ளைகள் நேரிடையாக கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள்! நான் கொஞ்சம் கோபக்காரன் யார் துணையும் விரும்பாதவன் !நானும் அந்த பெண்ணிடம் சொல்லி பார்த்தேன் என அவள் பிடிவாகமாகயிருப்பகுபோல் தெரிந்தாள் எனக்கு பல்வலிவந்து மிகவும் துடித்த பொழுது ரத்தகொதிப்பும் சேர்ந்து கொண்டது எல்லோரையம் தவிரத்தேன் ஆனால் அவளிடம் பேச்சு குறையவில்லை!
ஏதோநட்புதானேத்தவிர
வேறெதுவும் இருப்பதாக எனக்கும் தெரியவில்லை யாரிடமும் விளக்கவும் முடியவில்லை ஆனால் உடல்மெலியதொடங்கியது தேவையில்லாமல் எல்லோர் வெறுப்புக்கும் ஆளாகும்படியாகிவிட்டது !அவள் பாராமெடிக்கல் ரத்தபரிசோதகராக பதவிக்கும் உதவநேறிட்டது நண்பர் மூலம்!
என் உடல் பலவீனம்! வீட்டை விட முடியவில்லை என் மனைவியும் வெறுப்பது புரிந்தது ! பலவீனமாகிவிட்ட என்னை கொரோனா சுலபமாக பிடித்துகொண்டுவிட்டது என் உறவுகள் மறந்தாலும் பாசத்தால் தவித்தாலும் ஒதுஙகியே தீர வண்டிய நிலை! மருத்துவமனை வாசம் அவளே சேர்த்தாள்
அவளாலும் விட்டு போக முடியவில்லை
என்னாலும் போராட மடியவில்லை
இன்று மாலை வீட்டுக்கு போக சொன்னேன் நிறைய பேசினாள்! திருமணம் செய்துக் கொள்,என்றேன் மருத்துவமனை தன் என் வீடு என்கிறாள்!
ஏன் என்னை விடாமல் இருக்கிறாய்என்று விருப்பமில்லாமல் கேட்டேன்
அதுக்கு தான் பிறந்தேன் னு சொல்லிவிட்டு சிரித்தாள்! ஒருநாள் காரில் வந்து நிற்கப் போகிறேன் பார் அவன்முன் என்று சொன்னவளாக இவள் இருக்க வாய்ப்பில்லை !
மறுஜன்மமோ?
அவள் சிரித்துக்கொண்டேயிருந்தாள்! என் நெஞ்சில் ஏதோ இருக்கமாக பிடித்து நெரிக்கிறது! வலித்தது !!அவளுக்கு அன்று வலித்ததுபோல!
கண்இருண்டுவர அவள் பாசத்துடனா பழிவாங்கும் பார்வையுடனா,அல்லது பரிதாூத்துடனா புரியவிடாமல் பார்க்கிறாள்!  மன்னித்துவிடு என்கிறேன்! என் கண்கள் மூடுகிறாள் !அமைதியடைந்துகொண்டிருக்கிறேன்!
நான் அடிக்கடி படிக்கும் மகாபாரத கதையில் பீஷ்மரை நோக்கி அம்பு போட அர்ஜுனன் பின் ஒளிந்து நின்று சிகண்டி போல் இவளோ? நானும் பீஷ்மனோ? !!
பீஷ்மநாகயிருந்தால் காலை வரை உயிர் படித்திருக்க முடியுமோ  பார்க்கலாம்
தொண்டையில் கொரோனா தாக்கம் கூடிக்கொண்டேயிருக்கக காலையும் வந்துவிட்டது அவள் என் உறவுகள் கவலையுடன் நிற்கிறார்கள்! அம்பு படுக்கையில் தள்ளியவர்கள்! யாரை குறை சொல்வது? யாரிடமும் வெறுப்பு விருப்பம் குறையத் தொடங்கி சில நொடிகள் வலி தொண்டையில் அதிகரித்து எல்லாம் அடங்குவது மட்டும் தெரிகிறது!
பிறகு மனதில் நினைவுகள் விலக விலக
ஆகாயத்தில் கலப்பது போல் ஒரே உணர்வு
உறவுகள் பார்வை முன் கறையை அந்த பெண்ணும் மறைய தொடங்கி ஒரே வெளிச்சத்தில் கலக்கிறேன் !




22.7.20

மலர்ந்தும் மலராத நினைவு


இன்று காலை நான் கண்ட கனவு என்னை மிகவும் நெகிழ வைத்தது!

மலர்நதும் மலராத ,
சேர்ந்தும் சேராத உறவின் நினைவு!

பிரிவது சேர்வதற்கு சேர்வது பிரிவதற்க்கே!

என் திருமணமான ஆறாவது மாதம் அவள் குறுக்கிட்டாள்!

ஒரே மருத்துவமனை நான் மருந்துகள் வினியோகிப்பவன்

அவள் கதிர் பிரிவு ரேடியாலஜீ ஆய்வாளர்!

சில நாட்கள் கண்கள் அவசர நேர்முகம் கண்டன.

இதுபோல பெண்ணுக்காக தேடினேன் ஆனால் விதி ஏனோ அவளை தாமதப்படுத்தியது
சில நாட்களில் குடியிருப்பும் அருகே அமைய என் வீட்டம்மாவுடனும் குடும்ப நட்பு.

பிறகு முதல் பையன் பிரசவத்திற்க்கு'என்பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா' கதைதான்
அது நட்பா வேறு ஏதாவதா புரியவில்லை

பிறகு என் மகன் பிறந்து கல்யாணப் பரிசு கதைதான் நட்பு தொடர்ந்தது.

எல்லை மீறியதில்லை .., விதி தான் இருக்கே!

எனக்கு வேறிடத்திற்கு மாற்றல் வந்தது

அழுது விட்டாள் அப்பதான் ஆழம் புரியத் தொடங்கியது.




மாற்றல் ரத்து செய்ய அவள் எவ்வளவோ தெரிந்தவர் மூலம் முயன்றாள்
விதிக்கு தான் வெற்றி ! 

பிரிந்தோம்

கொஞ்சநாள் தொய்வு .....

பிறகு பழைய சக ஊழியர்வீட்டு விசேஷம் வந்திருந்தாள் கூட

அவள் தாய் .திருமணம் செய்துக் கொள்ள மறுக்கிறாள் என்றாள்

நான் பேசி பார்த்தேன் அவள் கண்களில் நீர்!

கதிர் பிரிவில் வேலை விட முடியலை யாரும் பண்ணிக்க வரவில்லை

நான் எதிலுமே தாமதித்துவிட்டேன்!

என்றுசொல்லி கூர்மையாக பார்க்கிறாள் இன்றும் வலிக்கிறது!

பிறகு ஒரு தடவை போன் செய்து வீட்டுக்கு வரசொன்னாள்

அவள் தாயார் ஏகமா புகார் யாரையும் வேண்டாம் என்கிறாள் நீங்களே சொல்லுங்கன்னு சொல்லி விட்டு போனாள்.

தத்துவ மெல்லாம் சொல்லி பார்த்தேன் கேட்கவில்லை என், பிள்ளைகள் மனைவி நலனையும் கேட்டுக்கொண்டிருந்தாள்

நான் சொல்வதை கேட்காததற்க்கா வரசொன்னாய் !

பார்க்கணும்னு தோணிற்று என்கிறாள் அம்மா வார்த்தை கேள் என்று சொல்லி மனமில்லாமல் விடைபெற்ற பின் மீண்டும் பலநாள் பிரிவு.

என் புதிய வீ்ட்டில குடியேறிய சில நாட்களில் என் தந்தை இறப்பு தகவல் சொன்னேன் ஓடி வந்தாள்.

பிறகு குடும்பம் பசங்க படிப்பு தொலைதூரப் பயண அலுவலகம் சோர்வு குடும்பசுமை காலம் மறதியின் நண்பன்.

மறந்தே போய் விட்டேன் இன்று காலை இனிய கனவு ....!!

பூங்கா நகர் ரயிலடியின் அருகே வருகிறேன் பூக்காரம்மாவிடம் பார்த்தேன் அவளை.

40 ரூபா கொடு அந்த பூ வாங்கிகொடு வண்டி வரப்போகுது தாமதமாகிவிட்டது என்கிறாள் இதுலேயும் தாமதமாதாமதமா? என்று சகஜமாக சொல்கிறேன்.

அவள் பணத்தினை வாங்கிப் பூக்காரம்மாவிடம் கொடுக்கிறாள் நான் வாங்கிய பூ வை என்னிடமிருந்து வாங்கி தலையில் வைத்த்துக்கொண்டே நெருங்கும் மினசாரவண்டியில் ஏற போகிறாள் திரும்பி பார்க்கிறாள் பை பை சொல்கிறாள்.

கனவு கலைந்து நான் நினைவில் வியந்த நேரம் 8 மணிக்கு போன் வந்தது.

அவள் தாய்தான்! 

கதிர்வீச்சு பாதிப்பினால் உயிரை விட்டாளாம் என் மனைவிதான் பேசினாள் கடைசி வரை கல்யாணம் பண்ணிக்கலையாமே என்று மனைவி வெகுளியாக கேட்கிறாள்.

எல்லாவற்றிலும் தாமதப்பட்டவளை மரணம் மற்றும் முந்திக்கொண்டு அழைத்துக்கொண்டு விட்டது.

கொரோனாபுண்ணியத்தில் இங்கிருந்தபடியே வருத்தம் சொல்லிவிட்டாளாம் மனைவி!

அவள் கடமை அவ்வளவு தான்! ஆனால் எனக்கு?

இன்று காலை கனவில் என்னிடம் பூ வாங்கி வைத்துக் கொண்டு விடைபெற்றது யாரிடம் சொல்வேன் மலர்ந்தும் மலராத சேர்ந்தும் சேராத நினைவை பதித்து விட்டு போய்விட்டாள்!