26.9.20

கண்ணனுடன் சில நொடிகள்

 கண்ணனிடம் பேச தொடங்கினேன்

நான் உடலில்லை, நான் மனம், 24 தத்துவங்களும் நானல்ல நான் ஆன்மா

அந்த ஆன்மாவும் கண்ணன் அல்லது உன் இஷ்ட தெய்வம் என்று சொல்கிறார்கள், நீயும் கீதையில் சொல்லியிருக்கிறாய், அஹம் ஆத்மா குடாகேச,என்ற ச்லோகத்தில்! கொஞ்சம் புரியும் படியாக சொல்லேன் என்றேன்! 

மிக சாமர்த்யமாக பெரிய விஷயத்தை சுளுவாக கேட்கிறாய்! நானும் உனக்கு விளக்க பார்க்கிறேன். 

உன் வீட்டில் இயங்கும் எல்லா மின்சார உபகரணங்கள் இயங்க ஒரே மின்சாரம் 

பயன்படுவது போல் இந்த ஆன்மா எல்லாவித அசையும் அசையாத வாழும் 

உயிர்களனைத்திலும் இருந்து இயக்குகிறது. நான்தான் அந்த மின்சாரம் போன்ற சக்தி என்று நினைத்துக் கொள்!ஆனால் அந்த மின்சாரத்திற்கு தனி அறிவு  கிடையாது .எனக்கு அதாவது ஆன்மாவுக்கு குணம் அறிவு எங்கும் எப்பொழுதும் தங்குதடையின்றி இருந்து இயங்குவது தான் குணம்! 

நான் கேட்கிறேன் குணத்தை எப்படி உணர்வது? 

கண்ணன் சொல்கிறான்- நீ உடல்,மனம் போன்ற 24 தத்துவங்கள் என்றால் இவற்றின் குணம் அமைதியில்லாதது எப்பவும் மாறிக்கொண்டேய்குப்பதுன்னு பொருள்! 

நீ நினைவில் இருக்கும்போதும் உடல் என்ற ஸ்தூல சரீரமாக இருக்கிறாய். 

மனதளவில் இயங்கும்போது சூட்சும சரீரமாகவும இயங்குகிறாய்

கனவு நிலையில் சூட்சும சரீரம்தான் எல்லா விஷயங்களையும் தாறுமாறாக

பார்க்கிறது 

அமைதி அதுவரையில் இல்லை ஆனால் ஆழ்ந்த தூக்கத்தில் அங்கு உன்உடலுமில்லை மனமுமில்லை எதுவுமில்லை !உன் கண்ணனான நானும் இல்லையல்லவா ?ஆனால் அங்குயிருந்தது என்ன? சுகமான நிலை! 

யாருமே இதுவரையில் இம்சையாக தூங்கினேன் னு சொன்னதில்லை! 

அந்தநிலையைவிட்டுவிட்டு எழ எவரம்

விரும்புவதுகூடயில்லை! இன்னமும் கொஞ்சம் தூங்கலாமாஎன்று விரும்பாத உயிரே யல்லை! ஏன் என்றால் அதுதான்உன்இயல்பான நிலை மற்ற எல்லா தலைவலிகளையும் நான் உடல் நான் மனம் எல்லாம் என்னுடையது என்று நினைத்தவுடனையே அந்த அமைதி தொலைந்து விடுகிறது! 

உண்மையில் ஆண்மா இறைவன் தெய்வத்தின் நிலை இந்த அமைதி சாந்தி தான் !

நான் கண்ணனாக தேர் தட்டில் வெட்டுக் கொல் என்ற கோஷங்களுக்கு

நடுவில் அமைதியோடு 700 தத்துவங்களை கீதையாக கொடுத்தேன் அந்த போரையும் இம்மியளவும் அமைதி கலையாமல் புன்முறுவலுடன் முடித்தேன்! ராமனாக வெளி பார்வைக்கு மனித வேடம் பூண்டதால் அழுது புலம்புவது போல் நடித்தேன தவிர ஆழத்தில் இந்த சாந்தியோடதானிருந்தேன் !இருப்பேன் !!இதுதான ஆண்மா தெய்வம் கண்ணனான என் குணம் !சிலுவையில் ஏசுபிரானாக உடல் முழுவதும் ஒர் இடம் பாக்கியில்லாமல் ஆகளால் அடிக்கப்பட்டு நான் அழவில்லை, அவர்களின் அறியாமையை மன்னித்தேன்! 

நீயும் உடல் மனம் நான் எனது என்ற எண்ணத்தை விட்டு அமைதிதான் உன் இயல்பு என உணர்ந்தாயேயானால் நீயும் நானும் ஒரேஆண்மாவாக ஆகிவிடலாம்

என்று சொல்கிறான் நம் கண்ணன்! 

அதையே பின்பற்றுவோமாக! 

25.9.20

கண்ணனுடன் சில நொடிகள்

எல்லோரடமும் பேசுவது குறைந்துவிட்டது. அசத்து பேச்சுன்னு வெளிப்படையாகவே ஆகிவிட்டது நம்முடன் பேசிக்கோண்டயிருப்பது- அதைத்தான் நினைவுதெரிந்தநொடியிலிருந்து செய்வது வெரும் பேத்தலாகயிருக்திறது. என்னதான் செய்வது? கண்ணனுடன் பேசலாமேன்னு தோன்றியது கூப்பிடமாட்டேனான்னு இருந்தவன் பொல் பேசலாமேன்னு என்கிறான்! உன்னோடு பேச ஆசைதான, ஆனா எல்லோரும் விரும்பாததைத் நீ விரும்புவியோன்னு சந்தேகம் என்றேன். பார்ப்போம், என்கிறான்! அறிவைப் பற்றி கேட்கிறேன் சொல் அதுதான் அறிவு? சிரித்தான் கண்ணன் பார்ப்பதெல்லாம் அறிவு தான்! இதிலிருந்துதான் எல்லாம் வந்தது. உன்னிடம் என்பார்களே? நானே கண்ணன் என்ற அறிவு தான்! நான் தனியாக திருக்கோயில் விரும்பினால் எல்லாமாக கடவுள் என்றேன் நடந்தது நீ கற்றக் கல்வியும் அறிவு தான் ஆனால் அது உனக்கு பணம் சேர்க்க தான் உதவியபது . என்னைப் பற்றி நீ அறிந்தது உன்னோடு பேசவைவக்கமுடிந்ததுபார், இதுதான் உயர்ந்த அறிவு. சரி,உனக்கு ரூபம் என்னைப்போல தானா ரூபமேயில்லைரூபமேயில்லைன்னு சொல்றாங்களே? அவர்கள் பாவத்தில் அப்படி! யார் என்னை எப்படி விரும்புகிறீர்களோ அவர்களுக்கு நான் அப்படியாகவேயிருக்கிறேன்! நீ இல்லவேயில்லைன்னு சொல்கிறவங்களுக்கு? அவர்களின் அந்த நம்பிக்கையாகவும் நான்தானிருக்கிறேன் அதை அவர்களுக்கு சொன்ன அவர்கள் தலைவர் படத்திற்க்கும் சமாதிக்கும் அவர்கள் பூஜைதான் செய்கிறார்கள்! அவர்களை விடுதலை வெளிநாட்டவர்க்கு எப்படி? அவர்களின் உழைப்பாக,ஒழுக்கமாக சுத்தமாக சமுதாய சேவையாக, ஊழலற்ற ஆட்சியாக உயிரினங்கள் மேல் அன்பாக நான்தான் இருக்கிறேன்! சரி உருவமில்லாமல் எப்படியிருக்கிறாய்? உனக்கு உருவமாக எப்படிதெரிகிறேனோ, அப்படியே உனக்குள்ள நீ தூங்கும் போதும் கனவிலும் நினைவிலும் நான்தான் சைதன்யம், அதிர்வாக சக்தியாக நீ உண்ட கண்டதையெல்லாம் சரிக்கிற சக்தியும் நான்தான்! எல்லோருள்ளம்தானே? ஆம் சத்தியமாக! எல்லாூக் கைகளாலும் செயல்படுவது, எல்லாகண்களாலும் பார்ப்பது, எல்லாமனங்களாலும் நினைப்பது, எல்லா நாக்கு களாலும் சுவைப்பது உரைப்பது எல்லா கால்களிலும் நடப்பது எல்லா சிறகுகளாலும் பறப்பது எல்லாம் நான்தான்! சுருக்கமாக சொன்னால் நானில்லாமல் ஒருத்தி திரும்புதிரும்புகூட நகராது! எனக்குபேசவார்தையில்லை நாளை நிறைய கேட்கிறேன் கண்ணா உள்ளே கூப்பிடுங்கள் ம்வர்க் கைப்பிடித்து செய்தே ஆகணும் என்கஷ்டம்! என்றேன். கஷ்டமானதை என்இஷ்டத்துக்க இனிமேலாவது செய்தேன், நான் அதையே உன் பூஜை யாக ஏற்க்கிறேன்ன்னு சொல்றேன் நம் கண்ணன்! இதுவும் பேத்தலாகயிருக்திறது இருந்தால் மன்னியுங்கள்!