சற்று நேரம் வரை கலகலப்பாக இருந்த
வீடு வெறிச்சோடி காணத் தொடங்கியது.
என் மனைவி வழக்கம்போல் கடவுளிடம்
பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறாள்!
நான் என் பெண் இல்லாமல் ,
தொலைகாட்சிபெட்டியில்
அருகிலிருந்தும் ,பார்க்க முடியாமல்
அணைத்து விட்டேன்!
அந்தி மழை தொடங்கிய பருவம்!
இரவு நெருங்க சற்று பயமாகயிருந்தது!
ஜன்னல் சாத்தப்போனேன்.
ஒரு பட்டாம்பூச்சி மிக அழகாக,
இருந்து பறந்து உள்ளே வந்து வட்டது!
விளக்கு வெளிச்சம் அழைத்திருக்கும்
விளக்கை சுற்றி சுற்றி வர வர .. .. .. ! !
.. . .. ..... . ... ..
என் பெண்ணை திருமணத்தில்
பெற்றபொழுது. .? என் மகன்
திருமணத்தின் நாளன்று தான்!
அவளும் என் மகளானாள்!
என் கையை குலுக்கி 'மருமக
வந்தாச்சா'ன்னு கேட்டவரிடம்
'மகள் வந்தாச்சு' என்றேன்!
சேர்வது என்பது பிரிவதற்க்கோ?
திருமணமான கொஞ்ச நாட்களிலேயே
லண்டன் செல்ல வேண்டியதாயிற்று ,
மகனுக்கு!
நம்ம நாட்டுல பணம் சேர்க்க வெளிநாட்டு
வருமானம் பெருக்க நம் குழந்தைகள்
பறக்க வேண்டிய கட்டாயம்!
இரண்டு வாரம் தேனிலவு பொதுவாக!
இவர்களுக்கு இரண்டு வருடம் ,
தொடர்ந்தது!
கிளம்பும் போது.. இதோ இந்த
பட்டாம்பூச்சி போலே பறந்தாள்.. ..
லண்டன் மற்றும் பிரான்ஸ் ஈபிள் டவர்
ஸ்விட்ஹர்லாண்ட் மலையில் ரெயிலில்
நீரோட்டபதகுகளில் இருந்தவாறே
பேசுவாள் வாஸப்பில்!
பட்டாம்பூச்சிப்போல் பறந்தாள். .. . !!
. .. . ..... ..
இந்த பட்டாம்பூச்சியும் மின்விளக்கை
சுற்றிவந்து வந்து. . . ., ?
விளக்கின் வெப்பம் தாளாமல்,
தரையில் சுவர் ஓரமாக விழுந்து விட்டது!
அதற்க்கு விதியென்ற பெயரில்,
தொலைகாட்சி பெட்டி பின் வசித்த
பல்லி ஒன்று பாய்ந்து பட்டாம்பூச்சி
அருகே வர.. . . , ?
. .. . ... . .
.
கொரோனா புண்ணியத்தில்,
என் மகனும் மருமகளும்,
திடீரென நாடு திரும்பி விட்டார்கள்!
என்னமோ ஒரு மாதிரியாகயிருந்தாள்
என் மகள்!
எனக்கு குலதெய்வம் கோவிலுக்கு போக
விருப்பம் . சொன்னேன் !அவர்களும்
நினைத்தார்கள் போல்!
எல்லோருமே போய் வந்தோம்.
வந்தபிறகு எல்லாம் சரியாக
இருப்பதுபோலிருந்தாலும்,
அவள் சாதாரணமாக இருப்பதாக
தெரியவில்லை. நடையில் வேகமில்லை!
கேட்டு விட்டேன் மகனிடம்!
குண்டை தூக்கிபோட்டான்! !
அவளுக்கு முதுகுதண்ட்ல் டி பி யாம். . . .!
. .. .... . .. . .. .
அந்த பட்டாம்பூச்சி வரப்போகும்
ஆபத்தை உணராமல் தரையிலே
சும்மாவாகக்கூட இல்லாமல் நகர்ந்து
சுற்றி கொண்டு இருக்க.. ..,
அந்த ராட்சத பல்லி மெதுவாக
நெருங்கிக்கொண்டிருக்க.. .. ,
பட்டாம்பூச்சியை காப்பத்தமுடியுமா?
அப்புறம் பல்லிககு ஆகாரமேது?
என்னதான் செய்யறது ன்னு,
புரியாமல், எதையாவது
செய்தேதீரணும்னு எழுந்தேன்!
. .. ... . . ..
என்னப்பா இது திடீர்னு இப்படி
சொல்றேன்னு கேட்டவாறே
அழுதுவிட்டேன்!
'இதுக்கு தான் பயந்தேன்! இன்னிக்கு
சாயங்காலம் ஆஸ்பிட்டல்
அப்பாயிண்ட்மெண்ட்! 'என்கிறான்.
என்ன பிரச்சினைம்மா உனக்கு ன்னு?
கேட்கிறேன். சொல்லிவைத்திருப்பான்
போல, பலவீனமாக சிரித்தாள்
'முதுகு தண்டுல டி பி யா யிருக்கலாம்,
போனா தான் தெரியும்.ஆபரேஷன் பண்ணவேண்டிவருமாம் வலிக்குமேப்பா' என்று அழுதுவிட்டாள்!
'அதெல்லாம் இருக்காது ! நான் டி பி ஆஸ்பிட்டல் மாத்திரைகளை அள்ளி கொடுத்திருக்கேன், மருந்துலயே
சரியாயிடும் பயம் வேண்டாம்- என்றேன்
உள்ளே குலை நடுங்குகிறது, !
ஆபரேஷனை இவள் தாங்குவாளா?
போய்பார்த்திட்டுவரட்டுமே? என்றாள்
என் மனைவி!
என்ன நடக்கிறதுன்னே தெரியலை!
மாலையும் வந்துவிட கிளம்பி
போய்விட்டாள் என் மகனுடன்..
அதான் வீடே விரிச்சோடிகிடக்க,
. .. .. ....... .
அந்த பல்லியும் நகரவில்லை , பட்டாம்பூச்சியும் துடிப்பதை,
நிறுத்தவில்லை!
நான் விரைந்து பட்டாம்பூச்சியை
மிருதுவாக பிடித்தேன். துடித்தது!
மெதுவாக ஜன்னலருகில்
பல்லிக்கு எட்டாத படி வைத்தேன்
பறந்து போய் விடும்! சற்று
நிம்மதியானது!
ஆனால் அது துடிப்பதை நிறுத்தவில்லை.. .
பல்லியும் பொறுமையை
இழக்கவில்லை!
. .. . . . ... ..
மகனிடமிருந்து போன் வந்தது,
பெரியமருத்துவருக்காக, காத்திருக்கிறாள்.
என்னவாகயிருக்குமாம்? கேட்டேன் .
அறுவை சிகிச்சை தேவைப்படும் ன்னு
நினைக்கிறேன்- என்றான் மிகவும்
தோய்ந்து விட்டான்!
சீப் டாக்டர் சொல்லட்டும்,
அதெல்லாம் தேவையிருக்காது,
நீ தைரியமாயிரு! என்றேன்.
மனைவியிடம் சொன்னேன்.
எம் பெருமாள் பாத்துப்பான் -என்றாள்
நம் பெருமாள் என்று திருத்தி
மனமார வேண்டினேன்!
ஜன்னல் சாற்றும் போது தான்
நினைவு வந்தது.... !
பட்டாம்பூச்சியை தேடினேன்.
ஜன்னலருகலேயே இருந்தது !
கதவை சாற்ற மனம் வரவில்லை
திறந்து விட்டே சாப்பிட அழைப்பு
வரவே சென்றேன்.
சற்று நேரம் சோபாவில் சாயந்தவாரே,
பார்த்துக் கொண்டிருந்தேன்
எதைபார்த்தேன்னு நினைவில்லை.
திடீரென்று நினைவு வரவே,
பட்டாம்பூச்சியை தேடி ஜன்னலருகில்
சென்ற நேரமும் அந்த பட்டாம்பூச்சி
பறந்து சென்றதும் ஒரே நேரமாகத்தான்
இருந்தது!
என்னமோ பல்லி வாயிலிருந்து,
நானே உயிர்காத்துக்கொண்டதாக
சிறிய சந்தோஷம்..!
போன் அழைக்க, மனைவி எடுக்கிறாள்!
'அப்படியா ? நிம்மதியா போச்சு ,சரி, நான் சொல்லிக்கறேன் நீங்க அவங்க வீட்டுக்கு
போய் தங்கிட்டு நாளைக்கு வந்துடுங்க'
குதூகலமாக சொல்கிறாள் -
அறுவை சிகிச்சை வேண்டாமாம்,
மருந்துகளாலயே 6 மாசத்துல குணமாயிடுமாம் , நடப்பாளாம்,
பெரிய டாக்டர்
சொல்லிட்டாராம் ! !
பெருமாள் சொன்னது போலிருந்தது!
என் மகள் அந்த பட்டாம்பூச்சி போல்
பறக்கப்போகிறாள்!!
பிறகு மகனும் பேசினான்.
என் பென்ஷன் பற்றி கேட்கிறான்!
பல நாட்களுக்கு பின் நிம்மதியாக
தூங்கினோம்!
. . . . . ... .. .. .. ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக