கண்ணனிடம் பேச தொடங்கினேன்
நான் உடலில்லை, நான் மனம், 24 தத்துவங்களும் நானல்ல நான் ஆன்மா
அந்த ஆன்மாவும் கண்ணன் அல்லது உன் இஷ்ட தெய்வம் என்று சொல்கிறார்கள், நீயும் கீதையில் சொல்லியிருக்கிறாய், அஹம் ஆத்மா குடாகேச,என்ற ச்லோகத்தில்! கொஞ்சம் புரியும் படியாக சொல்லேன் என்றேன்!
மிக சாமர்த்யமாக பெரிய விஷயத்தை சுளுவாக கேட்கிறாய்! நானும் உனக்கு விளக்க பார்க்கிறேன்.
உன் வீட்டில் இயங்கும் எல்லா மின்சார உபகரணங்கள் இயங்க ஒரே மின்சாரம்
பயன்படுவது போல் இந்த ஆன்மா எல்லாவித அசையும் அசையாத வாழும்
உயிர்களனைத்திலும் இருந்து இயக்குகிறது. நான்தான் அந்த மின்சாரம் போன்ற சக்தி என்று நினைத்துக் கொள்!ஆனால் அந்த மின்சாரத்திற்கு தனி அறிவு கிடையாது .எனக்கு அதாவது ஆன்மாவுக்கு குணம் அறிவு எங்கும் எப்பொழுதும் தங்குதடையின்றி இருந்து இயங்குவது தான் குணம்!
நான் கேட்கிறேன் குணத்தை எப்படி உணர்வது?
கண்ணன் சொல்கிறான்- நீ உடல்,மனம் போன்ற 24 தத்துவங்கள் என்றால் இவற்றின் குணம் அமைதியில்லாதது எப்பவும் மாறிக்கொண்டேய்குப்பதுன்னு பொருள்!
நீ நினைவில் இருக்கும்போதும் உடல் என்ற ஸ்தூல சரீரமாக இருக்கிறாய்.
மனதளவில் இயங்கும்போது சூட்சும சரீரமாகவும இயங்குகிறாய்
கனவு நிலையில் சூட்சும சரீரம்தான் எல்லா விஷயங்களையும் தாறுமாறாக
பார்க்கிறது
அமைதி அதுவரையில் இல்லை ஆனால் ஆழ்ந்த தூக்கத்தில் அங்கு உன்உடலுமில்லை மனமுமில்லை எதுவுமில்லை !உன் கண்ணனான நானும் இல்லையல்லவா ?ஆனால் அங்குயிருந்தது என்ன? சுகமான நிலை!
யாருமே இதுவரையில் இம்சையாக தூங்கினேன் னு சொன்னதில்லை!
அந்தநிலையைவிட்டுவிட்டு எழ எவரம்
விரும்புவதுகூடயில்லை! இன்னமும் கொஞ்சம் தூங்கலாமாஎன்று விரும்பாத உயிரே யல்லை! ஏன் என்றால் அதுதான்உன்இயல்பான நிலை மற்ற எல்லா தலைவலிகளையும் நான் உடல் நான் மனம் எல்லாம் என்னுடையது என்று நினைத்தவுடனையே அந்த அமைதி தொலைந்து விடுகிறது!
உண்மையில் ஆண்மா இறைவன் தெய்வத்தின் நிலை இந்த அமைதி சாந்தி தான் !
நான் கண்ணனாக தேர் தட்டில் வெட்டுக் கொல் என்ற கோஷங்களுக்கு
நடுவில் அமைதியோடு 700 தத்துவங்களை கீதையாக கொடுத்தேன் அந்த போரையும் இம்மியளவும் அமைதி கலையாமல் புன்முறுவலுடன் முடித்தேன்! ராமனாக வெளி பார்வைக்கு மனித வேடம் பூண்டதால் அழுது புலம்புவது போல் நடித்தேன தவிர ஆழத்தில் இந்த சாந்தியோடதானிருந்தேன் !இருப்பேன் !!இதுதான ஆண்மா தெய்வம் கண்ணனான என் குணம் !சிலுவையில் ஏசுபிரானாக உடல் முழுவதும் ஒர் இடம் பாக்கியில்லாமல் ஆகளால் அடிக்கப்பட்டு நான் அழவில்லை, அவர்களின் அறியாமையை மன்னித்தேன்!
நீயும் உடல் மனம் நான் எனது என்ற எண்ணத்தை விட்டு அமைதிதான் உன் இயல்பு என உணர்ந்தாயேயானால் நீயும் நானும் ஒரேஆண்மாவாக ஆகிவிடலாம்
என்று சொல்கிறான் நம் கண்ணன்!
அதையே பின்பற்றுவோமாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக